பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் பின்னணியில் யார்? - NIA விசாரணை வேண்டும் - அண்ணாமலை
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது -
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை எனப்படும் NIA விசாரிக்க வேண்டும்.
அப்போதுதான், இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்கும். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் யார் உண்மையான குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டு தேச விரோத சக்திகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர் நீட் தேர்வு ஆதரவு காரணமாக குண்டு வீசியதாக கூறுவது நகைச்சுவையாக உள்ளது. குண்டுவீச்சு சம்பவத்தில் மிகப்பெரிய சதி இருக்கிறது. இதனை விரிவாக விசாரிக்க வேண்டும். தடயத்தை காவல்துறை அழித்துள்ளது. எனவே என்.ஐ.ஏ விசாரணை வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.