அதிமுக நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு, கார் உடைப்பு..!
தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு
தூத்துக்குடி மாவட்டம், டூவிபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுக நயினார் . இவர் வீட்டில் மர்ம நபர்கள் யாரோ பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
மேலும், அதே பகுதியில் உள்ள ஆறுமுக நயினாரின் தம்பி ராமசாமி வீடு உள்ளது. இவர் வீட்டிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு, வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் அடித்து, உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுக நயினாரின் உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சி வெளியிட்டுள்ளனர்.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில், மற்றும் அவரது தம்பி ஆகியோரது வீடுகளில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.