கடலூரில் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பரபரப்பு சம்பவம்
கடலூர், பெரியகுப்பம் பகுதியில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் சுமார் 2800 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட எண்ணெய் ஆலை, பாதியிலேயே மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துக்கொண்டிருந்தன.
இந்நிலையில், நிறைய கொள்ளை கும்பல் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கொள்ளை அடிக்க வந்த கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்ற போது, 6 பெட்ரோல் குண்டுகளை கொள்ளையர்கள் போலீசார் மீது வீசியுள்ளனர். நல்லவேளையாக 3 பெட்ரோல் குண்டுகள் மட்டுமே வெடித்தது. அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.