மத்திய அமைச்சரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - தொடரும் பதற்றம்..!
மணிப்பூரில் மத்திய இணையமைச்சர் ஆர்,கே.ரஞ்சன் சிங்கின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம் நிலவி வருகிறது.
வன்முறைக்கான காரணம்
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே இந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது.
மாநிலத்தில் உள்ள பெரும்பான்மை மிக்க மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியின அந்தஸ்து வழங்க கோரிக்கை எழுந்த நிலையில், அதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவே இரு சமூகத்தினருக்கான மோதலுக்கான காரணம்.

மணிப்பூர் முழுவதும் ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் தீவர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றனர்.
மைதேயி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் பழங்குடியினரை அதிகம் கொண்ட காங்போபி மாவட்டத்தில் உள்ள காமன்லோக் பகுதியில், குகி பழங்குடியினர் வாழும் ஒரு கிராமத்தின் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய இணையமைச்சர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு
இச்சம்பவத்தை அடுத்து கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கலவரம் வெடித்ததால் ஊரடங்கு தளர்வு நேரம் குறைக்கப்பட்டது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள மத்திய வெளியுறவு மற்றும் கல்வி இணையமைச்சர் ரஞ்சன் சிங்கின் வீட்டின் முன்பு நேற்று இரவு 8.30 மணியளவில் கூடிய போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் கலவரத்தை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
இச்சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இல்லாததால் காயம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் லாம்பெல் பகுதியில் அமைந்துள்ள குகி சமூகப் பெண் அமைச்சரான நேம்சா கிப்ஜெனின் இல்லத்திற்கு மர்ம நபர்கள் புதன்கிழமை இரவு தீ வைத்தனர்.