காதலர் தினத்தில் காதலை ஏற்க மறுத்ததால் பள்ளி மாணவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Tamil nadu Tamil Nadu Police Madurai
By Thahir Feb 14, 2023 12:00 PM GMT
Report

காதலை ஏற்க மறுத்த மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காதல் தகராறு - கைது 

மதுரையை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அனுப்பனடியை சேர்ந்த மணிரத்தினம் என்ற வாலிபர் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார்.

இது பற்றி மணிரத்தினத்தின் குடும்பத்தினரிடம் மாணவியின் தந்தை முறையிட்ட நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரின் பேரில் மணிரத்தினத்தை போலீசார் கைது செய்தனர்.

Petrol bomb hurled at student

அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அங்கிருந்து வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு சென்று விட்டனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு 

இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த மணிரத்தினம் மாணவியை காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் மாணவி மணிரத்தினத்தின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது நண்பருடன் சென்று மாணவியின் வீட்டின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியுள்ளார்.

இதனால் பெரும் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில் மணிரத்தினம் மற்றும் அவரது நண்பர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.