இதுக்கெல்லாம் பெட்ரோல் குண்டு வீச்சா? அய்யோ!!
வேலூர் அருகே சகதி மேலே அடித்த ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசி இருசக்கர வாகனத்தை கொளுத்திய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுகார தெருவை சேர்ந்த அப்ரோஸ் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தெருவோரம் நின்று கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த கலீம் என்பவர், அந்த வழியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அப்ரோஸ் மீது சகதி தெறித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், கலீம்மின் பைக்கை பெட்ரோல் குண்டு வீசு எறிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன் படி, நள்ளிரவு 1 மணியளவிஉல் 3 பேர் குண்ட கும்பல், கலீல் பைக்கிற்கு பதிலாக ஆத்திரத்தில் நைமுதின் என்பவர் பைக்கை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
இதனை தொடர்ந்து மறுநாள் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு அப்ரோஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து சிறையில்
அடைத்தனர்.