பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
சென்னை தி.நகர் பகுதியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏறப்பட்டுள்ளது.
மது பாட்டில் மூலம் 3 பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலாலயத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக துணை ஆணையர் தலைமையில் போலீசார் நடத்தியதில் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட போது பாஜக தலைமை அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
Petrol bombs were hurled at Tamil Nadu BJP office in Chennai last night by two unidentified men who came on bike. No one injured in the incident.
— Shilpa (@Shilpa1308) February 10, 2022
Police investigation underway. pic.twitter.com/4DsAKRQAmh
You May Like This