வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ... இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்
எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று ஒருநாள் மட்டும் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை குறைத்ததால் சில்லறை விற்பனையில் சில்லறை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது.
மேலும் கடந்த மே 21 ஆம் தேதி மத்திய அரசால் குறைத்து அறிவிக்கப்பட்ட சிறப்பு கலால் வரியால் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 9.12ம், டீசல் ரூ. 6.68ம் குறைக்கப்பட்டன. இதனால் விலை குறைப்பு நாளில் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எண்ணெய் நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் மே 31 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்த உள்ளதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விநியோகம் வழங்கப்படும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கூறியிருந்தது.
அந்த வகையில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட அகில இந்திய அளவில் 24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் இன்று நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.