பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர்கிறது : நிதி அமைச்சகம் தகவல்

Ministry of Finance Petrol and diesel price
By Irumporai Apr 14, 2022 05:37 AM GMT
Report

பெட்ரோல் ,டீசல் மீதானவரி மேலும் உயர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து வருகிறது இதனால் பொதுமக்கள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்கவேண்டும் என்ற பெட்ரோலிய அமைச்சகத்தின் கோரிக்கையை நிதியமைச்சகம் நிராகரித்துள்ளது .

அதே சமயம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்த்திக்கொள்ளவும் நிதி அமைச்சகம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகவே நிதி அமைச்சகத்தின் தகவலை தொடர்ந்து பெட்ரோல்,டீசல் விலை மேலும் உயர்கின்றது ஏற்கனவே அதாவது ,2014 - ல் ரூ 9.48 -ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி தற்போது (2022) ரூ 27.90 - ஆக உயர்ந்துள்ளது . ஐந்து மாநிலங்களின் தேர்தல்கள் முடிந்த பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது .