இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயித்து அந்நாட்டு அரசு உத்தரவு - விலை எவ்வளவுன்னு தெரியுமா? இதோ
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
அந்நாட்டுக்கு உதவிடும் வகையில் எரிபொருள் வாங்குவதற்கு இந்தியா கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3 ஆயிரத்து 750 கோடியும்,கடந்த மாதம் அதே தொகையும் இந்தியா கடனாக வழங்கியது. ஏற்கனவே, பல தவணைகளாக பெட்ரோல், டீசலை இந்தியா அனுப்பி வைத்தது. கடந்த 21-ந் தேதி 40 ஆயிரம் டீசல் இந்தியா வழங்கியது.
இந்தியா மேலும் 40 ஆயிரம் டன் பெட்ரோலை கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. தற்போது, அந்தக் கப்பல் நேற்று முன்தினம் கொழும்பு சென்றடைந்ததாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450 ரூபாயாகவும், டீசல் விலை ரூ.400 ஆகவும் நிர்ணயம் செய்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
