சென்னையில் அதிரடியாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை - எவ்வளவு தெரியுமா? மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்

By Nandhini May 22, 2022 07:13 AM GMT
Report

இந்தியாவில் தொடர்ந்து வரலாறு காணாத விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தன. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110ஐ கடந்துள்ளது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால், பல கண்டனங்கள் எழுந்தாலும், பெட்ரோல் விலை குறைந்த பாடு இல்லை. நீண்ட நாள் மக்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு மக்களுக்கு பெரும் நிம்மதியான செய்தியை அளித்துள்ளது.

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பெட்ரோல் மீது ரூ.9.50ம், டீசல் மீது ரூ.7ம் விலை குறையும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.22 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6.70 ரூபாயும் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், மதுரையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.21 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 94.84 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் அதிரடியாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை - எவ்வளவு தெரியுமா? மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள் | Petrol And Diesel Prices

சென்னையில் அதிரடியாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை - எவ்வளவு தெரியுமா? மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள் | Petrol And Diesel Prices