பசு மாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டி மனு - இது தான் நீதிமன்றத்தின் வேலையா? கொந்தளித்த நீதிபதிகள்

Supreme Court of India
By Thahir Oct 10, 2022 09:26 AM GMT
Report

பசு மாட்டை இந்திய தேசிய விலங்காக அறிவிக்க வேண்டி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுதாராரிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகள் சரமாரி கேள்வி

இந்தியாவின் தேசிய விலங்காக புலி இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கோவன்ஷா சேவா சடன் என்ற அமைப்பு சார்பில் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பசு மாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டி மனு - இது தான் நீதிமன்றத்தின் வேலையா? கொந்தளித்த நீதிபதிகள் | Petition To Declare Cow As National Animal

இந்த மனு நீதிபதிகள் எஸ்கே கவுல் மற்றும் அபே எஸ் ஒஹா ஆகியோர் அடக்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இது தான் நீதிமன்றத்தின் வேலையா? அபராதம் விதிக்கும் வகையிலான மனுக்களை நீங்கள் ஏன் தாக்கல் செய்கிறீர்கள்? எந்த அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது? நீங்கள் நீதிமன்றத்திற்கு வருவதால் நாங்கள் சட்டத்தை காற்றில் பறக்கவிட வேண்டுமா? என சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பசு மாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டி மனு - இது தான் நீதிமன்றத்தின் வேலையா? கொந்தளித்த நீதிபதிகள் | Petition To Declare Cow As National Animal

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், மனு தாக்கல் செய்த மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.