சிறையிலிருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதியளிக்க வேண்டும் - நீதிமன்றத்தில் மனு!
சிறையில் இருந்தபடியே ஆட்சி செய்ய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறையில் இருந்தபடியே ஆட்சி செய்ய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஊடக நிறுவனங்களில் கெஜ்ரிவாலின் ராஜினாமா மற்றும் டெல்லியில் ஜனநாயக ஆட்சியை அமல்படுத்துவது போன்ற செய்திகள் வெளியாவதை கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும்.
கோரிக்கை
கோரிக்கை மேலும், அரவிந்த கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்தபடி காணொலி வாயிலாக அமைச்சரவை கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறையிலிருந்து ஆட்சி செய்ய முதலமைச்சருக்கோ, பிரதமருக்கோ அரசமைப்பு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil