உரிமை தொகை ரூ.1000 வழங்கும் திட்டம்.. எழுந்த எதிர்ப்பு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கு எதிராக எழுந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உரிமை தொகை
தமிழ்நாட்டில் தற்பொழுது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் 1 கோடியே 63 லட்சம் குடும்ப தலைவிகள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் பலர் மேல்முறையீடு செய்துள்ளனர். தற்போது புதிதாக 7.35 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேல்முறையீடு செய்தவர்களுக்கு கடந்த 3 மாதத்தொகையும் மொத்தமாக சேர்த்து வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
நீதிமன்றம்
இந்நிலையில், பெண்களுக்கு மாதாமாதம் வழங்கும் மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு எதிராக தனிநபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "அதில் தமிழக அரசு ஏற்கனவே கடனில் உள்ளது. இந்த சூழலில் இது போன்ற உரிமை தொகையை திட்டம் கொண்டு வந்தால் மேலும் கடன் சுமை அதிகரிக்கும்.
அதனால் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது. அந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி நீதிபதி அதனை தள்ளுபடி செய்தார்.