தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீதான மனு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Dhanush Tamil Cinema Aishwarya Rajinikanth Tamil nadu Tamil Actors
By Jiyath Jan 18, 2024 06:37 AM GMT
Report

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீதான மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு தாக்கல் 

நடிகர் தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சியில், புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்கு குறித்து எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீதான மனு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Petition Against Actor Dhanush Dismissed In Court

இதனையடுத்து, நடிகர் தனுஷ் மற்றும் படத்தை தயாரித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் புகார் அளித்தார்.

இந்தநிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், புகாரை ரத்து செய்யக்கோரியும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்யப்பட்டது.

உத்தரவு 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக நிலுவையிலிருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீதான மனு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Petition Against Actor Dhanush Dismissed In Court

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியே, அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.