எல்லாமே ராட்சச காய்கறிகள்; ஒரு கத்தரிக்காய் மட்டுமே 3 கிலோ - விவசாயத்தில் அசத்தும் முதியவர்!

England World
By Jiyath Jan 24, 2024 09:06 AM GMT
Report

ராட்சச காய்கறிகளை விளைவித்து 79 வயது முதியவர் ஒருவர் சாதனை படைத்து வருகிறார். 

ராட்சச காய்கறி 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கட்டிட சர்வேயரான பீட்டர் க்ளேஸ்ப்ரூக் (79). இவர் தான் வளர்க்கும் அதிக எடையுள்ள காய்கறிகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.

எல்லாமே ராட்சச காய்கறிகள்; ஒரு கத்தரிக்காய் மட்டுமே 3 கிலோ - விவசாயத்தில் அசத்தும் முதியவர்! | Peter Glazebrook Growing Biggest Vegetables

பீட்டர் தன்னுடைய அரை ஏக்கர் தோட்டத்தில் எந்தவித நவீன இயந்திரங்களின் உதவியின்றி தானே எல்லா காய்கறிகளையும் விளைவித்து வருகிறார்.

தண்ணீர் பாய்ச்சுவதற்கு கூட மோட்டார் பயன்படுத்தாமல், வீட்டின் மேற்கூரையில் வடியும் மழைநீரையே மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்.

கின்னஸ் சாதனை

உலகம் முழுவதும் நடைபெறும் மிகப்பெரிய காய்கறி விளைச்சல் போட்டிகளில் வெள்ளரிக்காய், வெங்காயம், கத்தரிக்காய் போன்ற பிரிவுகளில் பீட்டர் பரிசுகளை வெல்கிறார்.

எல்லாமே ராட்சச காய்கறிகள்; ஒரு கத்தரிக்காய் மட்டுமே 3 கிலோ - விவசாயத்தில் அசத்தும் முதியவர்! | Peter Glazebrook Growing Biggest Vegetables

இவரது காய்கறி இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் உலகளவிலான போட்டிகளிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளது. இதுவரை அதிக எடையுள்ள உருளைக்கிழங்கு (4.98 கிலோ), காலிஃபளவர் (27.48 கிலோ), கத்தரிக்காய் (3.362 கிலோ) மற்றும் குடை மிளகாய் (750 கிராம்) அனைத்தும் இவரது தோட்டத்தில் விளைந்தது தான். மேலும், இந்த முதிய வயதிலும் தனது பெயரில் பல கின்னஸ் சாதனைகளை பீட்டர் வைத்துள்ளார்.