‘‘ விடவும் மனசு இல்ல , சமாளிக்கவும் முடியல ’’ - பன்றி வளர்க்க ஆசைபட்டு கடனாளியான பெண்
பிரேசிலில் 250 கிலோ எடையுள்ள பன்றியை ரோசங்கலா என்ற பெண்மணி ஒருவர் செல்லமாக தன் வீட்டில் வளர்த்து வந்துள்ளார் . தற்போது 3 வயதாகியுள்ள லிலிகா என பெயரிடப்பட்டுள்ள அந்த பன்றி, ஒரு நாளைக்கு 5 கிலோ பழம், காய்கறிகள் மற்றும் இதர உணவுகளையும் தின்றுவருவதாக கூறுகிறார்.
ஆசையாக வளர்க்க வாங்கிய பன்றி சக்தியை மீறி செலவு வைத்து வருவதாக அதன் உரிமையாளர் ரோசங்கலா கதறி வருகிறார்.
சிறிய வகை பன்றி என நினைத்து அதை வாங்கி வளர்த்ததாகவும், அதை வளர்க்க ஆகும் அன்றாட செலவு மிக அதிகமாக இருந்தாலும், அதன் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளதால் அதனை விற்பனை செய்ய தான் தயாராக இல்லை என ரோசங்கலா தெரிவித்துள்ளார்.
தற்போது ரோசங்கலாவும் அவரது செல்லமான பன்றி லிலிகாவும் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.