பனியில் சிக்கி உயிரிழந்த உரிமையாளர்! 4 நாட்கள் கடும்குளிரில் தவித்த வளர்ப்பு நாய்
இந்தியாவில் ஹிமாச்சல பிரதேசத்தில் பனியில் சிக்கி உயிரிழந்த உரிமையாளரின் அருகில் அவர் வளர்த்த நாய் ஒன்று உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் இருந்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பனியின் சிக்கிய உரிமையாளர்
இந்திய மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த பியூஷ் குமார் என்ற 13 வயது சிறுவன், தனது 19 வயது உறவினருடன் ட்ரக்கிங் சென்றுள்ளார்.
அதாவது பாரமணி மாதா கோவிலுக்கு கடந்த 23ம் தேதி சென்ற இவர்கள், உடன் நாயையும் அழைத்துச் சென்றுள்ளனர். சென்ற இடத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டுள்ளதுடன், உணவு தட்டுப்பாடும் இருந்துள்ளது.
இதனால் இருவரும் குளிர் தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளனர். ஆனால் இவர்களுடன் சென்ற நாய் மட்டும் இறந்த உரிமையாளரின் அருகில் 4 நாட்களாக இருந்துள்ளது.
சிறுவன் பியூஷ் குமாரின் சடலத்தினை விட்டு விலகாத நாய், நான்கு நாட்களாக உணவு தண்ணீர் இல்லாமல் காவலாக இருந்துள்ளது.
இதனை அறிந்த இந்திய ராணுவத்தினர் குறித்த நாய் மற்றும் இருவரின் சடலத்தினை ஹெலிகாப்டர் மூலமாக மீட்டுள்ளனர். குறித்த காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
Pet dog guards body of owner for 4 days amid snow in Himachal Pradesh’s Chamba pic.twitter.com/HlYo5B2ddG
— NDTV (@ndtv) January 27, 2026