பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு - பலி எண்ணிக்கை 83 ஆக உயர்வு..!
பாகிஸ்தான் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
பாக்.மசூதியில் பயங்கர குண்டு வெடிப்பு
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகர் மசூதி ஒன்று உள்ளது. இங்கு வழக்கம் போல் நேற்று மதியம் லுஹர் நேர தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில், சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், அனைவரும் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுமார் 50 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Death toll in Pakistan's Peshawar suicide blast rises to 83
— ANI Digital (@ani_digital) January 31, 2023
Read @ANI Story | https://t.co/ZwyNrhSeI7#Peshawar #Peshawarblast #Pakistan #PeshawarSuicideAttack #PeshawarSuicideBombing #PeshawarAttack pic.twitter.com/Os2cHCyXnW