தகாத உறவின் போது கணவருக்கு ஏற்பட்ட விபரீத ஆசை - பரிதாபமாக உயிரிழந்த மனைவி.!

Tamil nadu Tamil Nadu Police Death
By Thahir Feb 19, 2023 09:20 AM GMT
Report

தகாத உறவின் போது கணவருக்கு ஏற்பட்ட விபரீத ஆசையால் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

28 வயது பெண்ணுடன் 3வது திருமணம் 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே, வாத்திராயிருப்பு அடுத்த அத்திக்கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் வனராஜ்.

50 வயதான இவர் மலையடிவாரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமானவர்.

இந்த நிலையில் கணவரை இழந்து இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த 28 வயதான உமா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்த வனராஜ் அந்த தோட்டத்தில் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

உயிரிழந்த பரிதாபம் 

இந்த நிலையில் வீட்டில் இருந்த இரண்டு மகள்களும் துாங்கிய நிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் அறையின் மாடியில் வனராஜ் மற்றும் அவரின் மனைவி உமாவும் தங்கியுள்ளனர்.

Perverse desire during intercourse - death of wife

தொடர்ந்து காலையில் எழுந்து பார்த்த போது உமா உடலில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். ஆனாலும் வனராஜ் மனைவி இறந்தது குறித்து வெகுநேரம் கழித்தே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உமாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகாத உறவின் போது நிகழ்ந்த விபரீதம் 

பின்னர் போலீசார் விசாரணையில் இறங்கிய போது தான் தெரியவந்தது அந்த அதிர்ச்சி தகவல். வனராஜும் உமாவும் இரவு மோட்டர் அறையில் தங்கியிருந்த இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

பின்னர் போதையில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தன்னால் இதற்கு மேல் முடியாது என உமா மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வனராஜ் தன் கையில் இருந்த டார்ச்லைட்டை கொண்டு மனைவியின் உடலில் அடித்துள்ளார்.

இதனால் அலறித்துடித்த உமா அதிக ரத்தம் வெளியேறி இறந்தது தெரிய வந்தது இதையடுத்து போலீசார் வனராஜை கைது செய்தனர்.