பெருந்தலைவர் மக்கள் கட்சி - என்.ஆர்.தனபாலனின் பாதை ஓர் பார்வை!

Tamil nadu
By Sumathi Aug 07, 2022 06:55 AM GMT
Report

பெருந்தலைவர் காமராஜர் விட்டுச்சென்ற அரசியல் பணியினை தொட்டுத்தூக்கி அவர் வகுத்த அரசியல் பாதையில் நடந்திடவும், அவரது வரலாற்றை சாதனைகளை எடுத்துச் சொல்வதற்கும் நாடார் சமுதாய மக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், அரசியல் துறைகளில் சமுதாய மக்கள் அதிக இடம் பெறவும்,

பெருந்தலைவர் மக்கள் கட்சி

அரசு பதவிகளை பெற்றிடவும் பனைத் தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களும் நலன் காத்திடவும் , தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பா.சிவந்தி ஆதித்தனாரால் தொடங்கபட்ட கட்சி தான் பெருந்தலைவர் மக்கள் கட்சி.

பெருந்தலைவர் மக்கள் கட்சி - என்.ஆர்.தனபாலனின் பாதை ஓர் பார்வை! | Perunthalaivar Makkal Katchi Politicians List

தென்தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட நாடார் சமூகத்தினரால் இந்த கட்சி தோற்றுவிக்கப்பட்டது. தன் வாக்கு வங்கியாகத் தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள நாடார்களை மையமாகக் கொண்டு இக்கட்சி செயல்படுகிறது.

காமராஜர் அரசியல்

கட்சி 2011, மார்ச் 1ம் தேதி பா.சிவந்தி ஆதித்தன் அவர்களால் தொடங்கப்பட்டது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தொடங்கிய நேரத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ஒருவர் வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக,

பெருந்தலைவர் மக்கள் கட்சி - என்.ஆர்.தனபாலனின் பாதை ஓர் பார்வை! | Perunthalaivar Makkal Katchi Politicians List

ஒருநாள் முதல்வர் போல பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒருநாள் தலைவராக இருந்து விட்டு சென்றதின் காரணத்தால் 2011 சட்டமன்றத்தேர்தலில் 5 தொகுதி கிடைக்கவேண்டிய நேரத்தில் கலைஞர் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை மட்டும் ஒதுக்கித் தந்தார்.

திமுக கூட்டணி

அதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி வேட்பாளராக கட்சியின் அமைப்பாளராக இருந்த என் .ஆர் .தனபாலன் போட்டியிட்டார். தேர்தலில் சமுதாய தலைவர்கள் அனைவருமே பெருந்தலைவர் மக்கள் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி - என்.ஆர்.தனபாலனின் பாதை ஓர் பார்வை! | Perunthalaivar Makkal Katchi Politicians List

அந்தத் தேர்தலில் திமுகவின் மீது சுமத்தப்பட்டிருந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை காரணங்காட்டி திமுகவை மக்கள் ஒதுக்கிவிட்டு அதிக இடங்களில் அதிமுகவை வெற்றி பெறச்செய்ததினால் பெருந்தலைவர் மக்கள் கட்சி வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டியதாகி விட்டது.

என் .ஆர் .தனபாலன்

தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் கட்சியை வழி நடத்துகிறவர்கள் எல்லாம் அமைதியாகிவிட்டார்கள். நான்கு மாதங்கள் கட்சியில் எந்த செயல்பாடும் இல்லாததால் சமுதாய மக்கள் விக்கித்துப் போனார்கள்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி - என்.ஆர்.தனபாலனின் பாதை ஓர் பார்வை! | Perunthalaivar Makkal Katchi Politicians List

பெருந்தலைவரின் முகம் பதித்த கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திவிட்டு, பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்தலிலும் விட்டு இப்போது அந்தக்கொடியை அம்போ என்று விட்டு விடாதீர்கள் என்று அமைப்பாளர் என் .ஆர் .தனபாலனிடம் பலரும் முறையிட, சிவந்தி ஆதித்தனாரை சந்தித்து சமுதாய மக்களின் கோரிக்கைகளை எடுத்துக் கூறினார்.

மாநில நிர்வாகிகள் 

அதனையடுத்து சிவந்தி ஆதித்தனார், தனபாலனையே தலைமை ஏற்று நடத்துமாறு கேட்டுக் கொண்டார். கட்சி நிர்வாகிகளும் அதையே விரும்பியதால் தனபாலன் கட்சியின் தலைவரானார். அதன்பின், பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் , ஒன்றிய , நகர, கிளை நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பொறுப்புகளை வழங்கினார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி - என்.ஆர்.தனபாலனின் பாதை ஓர் பார்வை! | Perunthalaivar Makkal Katchi Politicians List

ஏ.செல்லப்பா (மாநில அமைப்புச் செயலாளர்), ஏ.தர்மராஜ் (மாநில பொருளாளர்), த.மோகன் (மாநில துணைத் தலைவர்) மற்றும் இதர நிர்வாகிகளும் பங்கு வகிக்கின்றனர்.

தொடர் சறுக்கல் 

தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் இவர்களுக்கு ஒரு தொகுதியை 2011ம் ஆண்டு தேர்தலில் ஒதுக்கியது. இத்தேர்தலில் என். ஆர். தன்பாலன் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி - என்.ஆர்.தனபாலனின் பாதை ஓர் பார்வை! | Perunthalaivar Makkal Katchi Politicians List

பெருந்தலைவர் மக்கள் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து திமுக கூட்டணியிலேயே அங்கம் வகித்து வந்தது. தேர்தல் சமயங்களிலும், போராட்டங்கள் நடைபெறும் போதும் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே பெருந்தலைவர் மக்கள் கட்சி இருந்து வந்தது.

அதிமுகவுடன் கூட்டணி 

மேலும் 2 சட்டசபை தேர்தல்களில் திமுக கூட்டணியில் இடம்பிடித்து பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அதில் தோல்வியையே தழுவினார். இந்தமுறையும் காலியாக உள்ள பெரம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி - என்.ஆர்.தனபாலனின் பாதை ஓர் பார்வை! | Perunthalaivar Makkal Katchi Politicians List

ஆனால் இதற்கு திமுக தரப்பு பச்சைக்கொடி காட்டவில்லை. இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் என்.ஆர்.தனபாலன் அதிமுக கட்சி அலுவலகம் சென்று ஈபிஎஸ், ஓபிஎஸை சந்தித்து நாடாளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

அவரை அதிமுக தலைமை உற்சாகமாக வரவேற்றது. அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் என்.ஆர்.தனபாலன் பங்கேற்றார். அதனையடுத்து, அதிமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு சென்னை பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.

பெருந்தலைவர் மக்கள் கட்சி - என்.ஆர்.தனபாலனின் பாதை ஓர் பார்வை! | Perunthalaivar Makkal Katchi Politicians List

அதில், திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், PTMK வேட்பாளர் என்.ஆர். தனபாலனை 54976 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். ஆனாலும் விடாது கட்சி பணிகளிலும், சமுதாய மக்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.