சசிகலாவை ரகசியமாக சந்தித்த அந்த நபர் யார்?

sasikala god Dhinakaran ammk
By Jon Mar 25, 2021 12:41 PM GMT
Report

குல தெய்வ கோவில் வழிபாட்டிற்காக தஞ்சாவூர் சென்றிருந்த சசிகலாவிடம் நபர் ஒருவர் அவரை ரகசியமாக பார்த்துவிட்டு சென்றுள்ளதால், இது குறித்து ஒரு பெரிய விசாரணையே நடைபெற்று வருகிறதாம். அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் சசிகலா, தன்னுடைய மனகஷ்டங்களை எல்லாம் கோவில் கோவிலுக்காக சென்று கூறி வருகிறார்.

அப்படி தான் 25 ஆண்டுகளுக்கு பின் சசிகலா, தன்னுடைய குல தெய்வ கோவிலுக்கு சென்று திரும்பினார். அப்போது அந்த கோவிலில் இருந்த பூசாரி, நீ நினைத்தது எல்லாம் இனி நடைபெறும், பகைமை எல்லாம் விலகப் போகிறது என்று கூறினாராம்.’ இந்த கோவில் வழிபாட்டிற்காக சசிகலாவுடன் சேர்ந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட கார்கள் வந்துள்ளன.

அப்போது தான் ஒரு நபர் சசிகலாவை ரகசியமாக காரிலே சந்தித்து பேசிவிட்டு சென்றுவிட்டாராம். சுமார் 15 நிமிடம் இவர்கள் தனியாக பேசி உள்ளனர். இவர் யார் என்பது தெரியவில்லை, ஆனால் அதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். இவர் பெரிய பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். இது போக அமமுக நிர்வாகிகள் பலரும் கூட கோவிலுக்கு வந்துள்ளனர்.

இதனால் அதிமுகவை சேர்ந்த சிலர் இந்த வருகையை தீவிரமாக கண்காணித்து உள்ளனர். சசிகலா என்ன செய்கிறார்? எங்கே போகிறார்.. யாரிடம் எல்லாம் பேசுகிறார் என்று அதிமுக நிர்வாகிகள் தீவிரமாக கணித்து வருகிறார்களாம்.