பாபர் மசூதியின் இடிப்பில் முக்கிய பங்காற்றியவர் - இப்பொது பாஜகவின் எம்.பி வேட்பாளர்
கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் வடு இன்னும் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
மசூதி இடிப்பு
கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற அயோத்தி கோவிலின் கும்பாபிஷேகம் 500 ஆண்டுகள் போராட்டம் என்றாலும், அது பெரும் சர்ச்சையானது பாபர் மசூதி இடிப்பில் தான்.
1992-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் இன்றளவும் இந்திய அரசியலில் எதிரொலித்து கொண்டே இருக்கின்றது. விஎச்பி கரசேவையில் இந்த மசூதி இடிக்கப்பட்ட போது மசூதியின் குவிமாடத்தை இடித்த கரசேவகர்களில் ஒருவர் டாக்டர் அஜித் கோப்சடே என்பவர்.
தனது சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெரிதாக ஈர்க்கப்பட்ட அவர், இளம் வயதிலேயே அந்த அமைப்பின் தீவிர உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். எம்.பி பதவி இவருக்கு தான் தற்போது மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கியுள்ளது பாஜக.
மகாராஷ்டிராவில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் 3 பேர் பட்டியலில் அஜித் கோப்சடே பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்த சூழலில் தான், பாபர் மசூதி இடிப்பு நடைபெற்ற போது ஒளிபரப்பட்ட பதிவில் இடம்பெற்றிருந்த அவரின் புகைப்படங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் வைரலாகி வருகின்றது. மாநிலத்தின் மருத்துவப் பிரிவின் தலைவராக அஜித் பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.