2 வருஷமா மனித மலத்தை குடிநீரில் கலந்து நபர் வெறிச்செயல் - சிசிடிவியால் அதிர்ச்சி!
நபர் ஒருவர் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூரச் செயல்
திருவெற்றியூர், கல்யாண செட்டி நகரைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக இவர்களுக்கு உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஆரோக்கியமாக இருந்துள்ளனர். வீட்டில் சமைத்த சத்தான உணவுகளையே சாப்பிட்டு வந்துள்ளனர். இருப்பினும் உடல் உபாதை காரணமாக சந்தேகித்து சங்கீதா, தன் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார்.
சிசிடிவியால் அதிர்ச்சி
அதன்பின், அதனை ஆராய்ந்ததில் ல் பக்கத்து வீட்டைச் சேர்ந்த எல்லப்பன் என்பவர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீட்டுக்குள் வந்து ஒரு பக்கெட்டை எடுத்துச் சென்று வெளியில் வைத்து மலத்தையும், சிறுநீரையும் கலந்து அதை, சங்கீதா வீட்டின் குடிநீர்த் தொட்டியில் ஊற்றுவது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா போலீஸில் புகாரளித்துள்ளார்.
ஆனால், அங்கு எல்லப்பனை, அழைத்து விசாரணை மேற்கொள்ளாமல் எழுதி வாங்கிக் கொண்டு ஜாமீனில் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், எல்லப்பனின் மைத்துனர் குமார் என்பவர், பெரிய ரவுடி என்றும் கொடுத்த புகாரைத் திரும்பப் பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் சங்கீதாவை மிரட்டியுள்ளனர். முன்னதாக, எல்லப்பனின் தந்தைக்கும், மோகனின் தந்தைக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
அப்போது, எல்லப்பனின் தந்தை விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். அதற்கு மோகன் குடும்பத்தினர்தான் காரணம் என நினைத்து, அவர் குடும்பத்தை பழிவாங்க 2 வருடமாக குடிநீரில் மலத்தைக் கலந்து வந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.