போதையில் பேருந்து முன் படுத்து ரகளை செய்த நபர் - தடியடி நடத்தி விரட்டிய சிங்கப்பெண்!

bus viralvideo
By Irumporai Jul 05, 2021 07:12 PM GMT
Report

குடிபோதையில் பேருந்து முன்பு படுத்து கிடந்து ரகளை செய்த நபரை பெண் ஒருவர் கம்பு கொண்டு அடித்து விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

போதையில் பேருந்து முன் படுத்து ரகளை செய்த நபர் - தடியடி நடத்தி விரட்டிய சிங்கப்பெண்! | Person Lying In Front Of The Bus And Making

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசு பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது குடிமகன் ஒருவர் பேருந்தை வழிமறித்து படுத்து கிடந்துள்ளார்.

பேருந்தில் இருந்தவர்கள் சத்தம் வைத்தும் அவர் நகரவில்லை. எனவே, பெண்மணி ஒருவர் கையில் தடியுடன் வந்து அந்த நபரை விரட்டியடித்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.