ரீல்ஸூக்கு லைக் போட்ட இளைஞர்; வீட்டுக்கு அழைத்த திருமணமான பெண் - இறுதியில் ட்விஸ்ட்!
இன்ஸ்டகிராமில் பழகி நேரில் சந்திக்க வந்த இளைஞர் பெண்ணின் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரகசிய சந்திப்பு
திருப்பத்தூர் மாவட்டம் காவாபட்டறை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரின் மனைவி நதியா(33) தினமும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வந்துள்ளார். நதியாவின் ரீல்ஸ்களுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பிரகதீஸ்வரர் (20) அடிமையாக இருந்துள்ளார்.
தொடர்ந்து நதியாவின் ரீல்ஸ் வீடியோ அனைத்திற்கும் லைக் போட்டு வந்துள்ளார். மேலும், நதியாவிடம் இன்ஸ்டாகிராமில் பேசியும் பழகியும் வந்துள்ளார். இந்நிலையில் பிரதீஸ்வரர் தான் ஒரு வேலையாக திருப்பத்தூர் வந்துள்ளேன், உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று நதியாவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கணவருக்கு தெரியாமல் நீலிக்கொல்லி பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு இரவு 10 மணியளவில் பிரகதீஸ்வரரை வரவழைத்துள்ளார் நதியா.
இளைஞர் செய்த காரியம்
அங்கு இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது பிரகதீஸ்வரர் "உன்னுடைய கழுத்தில் போட்டிருக்கும் நகைகள் தங்கமா? என நதியாவிடம் கேட்டுள்ளார். அதற்கு நதியா "தாலி சரடு மட்டும் தங்கம் என கூறியுள்ளார்.
அப்போது திடீரென நதியாவின் கழுத்தில் இருந்த தாலி சரடை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பிரதீஸ்வரர் ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நதியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு பிரதீஸ்வரரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த மூன்றரை பவுன் தாலி சரடை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.