ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர் - கூட்டம் கூடியதால் பரபரப்பு
ஓபிஎஸ் தலைமையில் நடந்த மாநாட்டில் கத்தியுடன் சுற்றித்திரிந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓபிஎஸ் மாநாடு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, ஓபிஎஸ்-ன் பலத்தை காட்ட, அவரது தலைமையில் திருச்சி டிவிஎஸ் சுங்கச்சாவடி அருகே உள்ள பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடைபெற்றது.
பரபரப்பு
இந்த மாநாடு, எம்ஜிஆர் பிறந்த நாள், ஜெயலலிதா பிறந்த நாள், அதிமுகவின் பொன் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. அதில் அவரது ஆதாராளர்கள் வைத்தியலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் அந்த மாநாட்டில் ஒருவர் கத்தியுடன் சுற்றியுள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். தகவல் அறிந்து கூட்டம் கூடிய தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Rasipalan: 100 வருட காத்திருப்பின் பலன்.. ஒரே வேளையில் உருவாகும் 3 யோகங்கள்- அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
