ஓடும் பேருந்தில் உயிரிழந்த பயணி - நடுரோட்டில் இறக்கிவிட்ட ஓட்டுனர்!

Death Viluppuram
By Sumathi Sep 11, 2024 06:58 AM GMT
Report

சடலத்துடன் உறவினர்களை இறக்கிவிட்ட ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் உயிரிழப்பு

சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள் பீமாமண்டாவி (60), அசோக்குமார் ஓயான் (19) கஜுனுகொடோபி (20). மூவரும் விக்கிரவாண்டியில் செயல்படும் தனியார் தீவன கம்பெணியில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

govt bus

விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் மூவரும் சென்றுள்ளனர். அப்போது செங்கல்பட்டு அருகே சென்றபோது பீமாமண்டாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு பேருந்திலேயே உயிரிழந்துள்ளார்.

இப்படியும் ஒருவரா...தந்தையின் சடலத்துடன் பல ஆண்டுகளாக வாழ்ந்த மகள் ! என்ன காரணம்?

இப்படியும் ஒருவரா...தந்தையின் சடலத்துடன் பல ஆண்டுகளாக வாழ்ந்த மகள் ! என்ன காரணம்?


ஓட்டுநர் பணிநீக்கம்

இதனையடுத்து இரவு என்று கூட பாராமல் இறந்த பீமாமண்டாவி (60) மற்றும் அவரது இரு பேரன்களான அசோக்குமார் ஓயான் (19) கஜுனுகொடோபி (20) ஆகிய மூவரையும் நடுவழியில் அரசுப் பேருந்தின் தற்காலிக ஓட்டுநர் ராம்குமார் மற்றும் நடத்துநர் ரசூல் ரகுமான் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

ஓடும் பேருந்தில் உயிரிழந்த பயணி - நடுரோட்டில் இறக்கிவிட்ட ஓட்டுனர்! | Person Dead In Government Bus Vilupuram

அதன்பின் தாத்தாவின் உடலை இரு பேரன்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவ்வழியாக வந்தவர்களின் உதவியால் ஆம்புலண்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை பரிந்துரை செய்தனர்.

அதன்படி, போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் குணசேகரன், சடலத்துடன் பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட தற்காலிக ஓட்டுநர் ராம்குமாரை பணி நீக்கமும் நடத்துநர் ரசூல்ரகுராமனை பணியிடை நீக்கமும் செய்து உத்தரவிட்டுள்ளார்.