ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமண சுபகாரியங்கள் நடத்த அனுமதி
நாளை முழு ஊரடங்கின்போது திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமணத்திற்கு செல்ல தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகளின் அழைப்பிதழ்களைக் காண்பித்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கின்போது திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது.
திருமண அழைப்பிதழை காண்பித்து தங்களின் பயணங்களை மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.
மேலும், திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.