எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை : தமிழக அரசு அனுமதி
எடப்பாடிபழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
எடப்பாடிபழனிசாமி
தமிழக எதிர்க்கட்சி தலைவராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி 2017 முதல் 2021 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த போது மத்திய மாநில அரசுகள் இணைந்து 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மருத்துவ கல்லூரிகள் புதியதாக கட்டப்பட்டன. தமிழகம் முழுவதும் மொத்தமாக 11 மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டன. இந்த விவகாரத்தில் விதிமுறைகளின் படி டெண்டர் விடப்படவில்லை எனகூறி லஞ்சஒழிப்பு துறை விசாரணை செய்து வருகிறது.

தமிழக அரசு அனுமதி
தமிழக எதிர்க்கட்சி தலைவராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி 2017 முதல் 2021 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த போது மத்திய மாநில அரசுகள் இணைந்து 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மருத்துவ கல்லூரிகள் புதியதாக கட்டப்பட்டன.
தமிழகம் முழுவதும் மொத்தமாக 11 மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டன. இந்த விவகாரத்தில் விதிமுறைகளின் படி டெண்டர் விடப்படவில்லை எனகூறி லஞ்சஒழிப்பு துறை விசாரணை செய்து வருகிறது.
உயர் அரசாங்க பத்வியில் ஒருவர் இருந்தால் அவரை விசாரிக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். தற்போது, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதியை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியிடம் முதற்கட்ட விசாரணை துவங்கப்படும். அதில் அதரங்கள் கிடைத்தால் மட்டுமே அவர் மீது லஞ்சஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.