கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டில் வைக்க அனுமதி
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டில் 1 மணிநேரம் வைக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13,550 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 104 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறினார்.
மேலும் உயிரிழந்த கொரோனா நோயாளிகளுக்கு அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்த முடியாத சூழல் உள்ளதால் மனஅழுத்தமும் கூடுகிறது.
எனவே உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்படும். அந்த உடல்களை வீட்டில் 1 மணிநேரம் வைக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை வீட்டிற்கு எடுத்து செல்லவோ, இறுதி சடங்குகளை உறவினர்கள் செய்யவோ அனுமதி அளிக்கப்படாமல் இருந்த நிலையில் கேரள அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.