மெட்ரோ ரயிலில் இனி போட்டோஷுட் நடத்த அனுமதி - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Kerala
By Thahir May 20, 2022 05:20 AM GMT
Report

கேரளாவில் மெட்ரோ ரயிலில் திருமண போட்டோஷுட் நடத்த கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

திருமணத்தின் போது தவிர்க்க முடியாத ஒன்று போட்டோஷுட் . திருமணம் செய்து கொள்ளும் புதுமண தம்பதிகளின் ஒரு ஆசை என்றால் வித விதமாக போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தான்.

மெட்ரோ ரயிலில் இனி போட்டோஷுட் நடத்த அனுமதி - எவ்வளவு கட்டணம் தெரியுமா? | Permission To Hold Photoshoot On Metro Train

காலங்கள் ஓடினாலும் நினைவுகளை மீண்டும் கண் முன்னே கொண்டு வருவது நம்முடைய கடந்து சென்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் மட்டுமே.

அந்த வகையில் கேரளாவில் மேட்ரோ ரயில்களில் போட்டோஷுட் எடுத்துக்கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயிலை லாபகரமானதாக மாற்ற இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் திரைப்படங்கள் மற்றும் விளம்பர சூட்டிங் போன்றவற்றிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது திருமண போட்டோஷுட்களுக்கு குறைவான கட்டணத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் இனி போட்டோஷுட் நடத்த அனுமதி - எவ்வளவு கட்டணம் தெரியுமா? | Permission To Hold Photoshoot On Metro Train

நிற்கும் ஒரு மெட்ரோ ரயில் பெட்டியில் அதிகபட்சமாக 2 மணி நேரத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் எனவும், ஓடும் மெட்ரோ ரயிலில் போட்டோஷுட் நடத்த 8 ஆயிரம் ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 10 ஆயிரம் வைப்பு தொகை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மெட்ரோ ரெயில் பெட்டிகள் வேண்டுமானால் நிற்கும் ரெயிலில் 2 மணி நேரத்திற்கு ரூ.12 ஆயிரம் செலுத்த வேண்டும்.

மெட்ரோ ரயிலில் இனி போட்டோஷுட் நடத்த அனுமதி - எவ்வளவு கட்டணம் தெரியுமா? | Permission To Hold Photoshoot On Metro Train

ஓடும் ரெயிலுக்கு ரூ.17,500 செலுத்த வேண்டும். வைப்புத் தொகையாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ரெயில் ஆலுவாவில் இருந்து பெட்டா வரை இயக்கப்படும். இந்த சேவை ரயில் ஆலுவாவில் இருந்து பெட்டா வரை இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.