3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி.. குடும்ப கட்டுப்பாடு விதியை தளர்த்திய சீன அரசு

china threechildren relaxes
By Irumporai May 31, 2021 11:12 AM GMT
Irumporai

Irumporai

in சீனா
Report

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. 140 கோடி பேர் சீனாவில் உள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் சீனாவில் குடும்ப கட்டுப்பாட்டு முறை அமலில் உள்ளது.

அதாவது சீன குடியுரிமையுள்ள ஒவ்வொரு தம்பதியும் 2 குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்கு மேல் பெற்றுக்கொண்டால் அபராதம் விதிக்கப்படும்.அரசு திட்டங்கள் மூலம் பலன் பெற முடியாது.

இந்த திட்டம் சீன அரசினால் கடந்த சில வருடமாக அமலில் உள்ளது. இந்த திட்டம் விமர்சனத்தை சந்தித்தாலும் மிக கடுமையாக பின்பற்றப்பட்டது.

இதன் விளைவால் சீனாவின் மக்கள் தொகையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

 மக்கள் தொகை வளர்ச்சி மிகப்பெரிய சரிவை சந்தித்தால் சீன அரசு தற்போது இந்த திட்டத்தை கைவிட்டுள்ளது.

அதன்படி சர்ச்சைக்குரிய 2 குழந்தை கட்டுப்பாடு திட்டம் முடிவிற்கு வந்துள்ளது, அங்கு மக்கள் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

  ஆனால் இது சீனாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை என கூறுகின்றனர் ஆய்வாளர்கள் சிலர் .

அதாவது சீனமக்களிடையே குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் விருப்பம் குறைந்துவிட்டது தொடர் கட்டுப்பாடுகள் காரணமாகவும், மக்கள் குறைந்த குழந்தைகளை பெற்றுக்கொள்ள பழக்கப்பட்டுவிட்டதாலும், இந்த புதிய தளர்வு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துத்தாது என கூறுகின்றனர்.