அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி : தமிழக அரசு உத்தரவு

lockdown tamilnadu
By Irumporai Jul 02, 2021 03:11 PM GMT
Report

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் ஜூலை 5ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மருத்துவக் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்திய முதல்வர் ஜூலை 5ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை நீட்டித்துள்ளார்.

கூடுதல் தளர்வுகள்:

அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க அனுமதி.

உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி.

அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் உரிய காற்றோட்ட வசதியுடன் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

அனைத்து மாவட்டங்களிலும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி

தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி

அனைத்து துணிக்கடை, நகைக்கடைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி