இந்தியாவுடன் அமைதியைதான் விரும்புகிறோம் : பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரிப் கருத்து
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண போரை விரும்பவில்லை என பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
செபாஸ் ஷெரிப்
அமெரிக்காவின் ஹார்வட் பல்கலைக்கழக தூதுக்குழு மாணவர்களிடம் கலந்துரையாடிய பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரிப், இந்தியா பாகிஸ்தான் உறவு, பாகிஸ்தானின் பொருளாதாரம் குறித்து கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் இந்தியாவுடன் நிரந்தர அமைதியை பேச்சுவார்த்தை மூலம் நாடுவதாகவும், இரு நாடுகளும் போர் செய்வதில் விருப்பம் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் காஷ்மீர் பிரச்னையை ஐக்கிய நாடுகள் அவையில் தீர்வு காண முற்படுவதாக தெரிவித்தார்.

5 ஆகஸ்ட் 2019 அன்று, காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தபோது, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சிக்கல் மேலும் அதிகரித்தது. அப்போது பாகிஸ்தான் தனது நாட்டில் இருந்து இந்திய தூதுவரை வெளியேற்றி தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியது.
அணு ஆயுதம் பாதுகாப்பிற்கு மட்டுமே
இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுவிழந்தது. இருப்பினும் ஜம்மு காஷ்மீர் பகுதி இந்த நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக, எப்போதும் இருக்கும் என இந்தியா உறுதிபட தெரிவித்தது.
மேலும் பாகிஸ்தானுடம் வன்முறை மற்றும் தீவிரவாதமற்ற உறவை பேணுவதாகவும் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் பிரதமர் இரு நாடுகளும் போர் செய்வதில் விருப்பம் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் காஷ்மீர் பிரச்னையை ஐக்கிய நாடுகள் அவையில் தீர்வு காண முற்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் உள்ள அணுஆய்தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டும் தான் என்றும் யாரையும் அழிக்க அல்ல என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் பொருளாதாரம் பற்றி கூறிய செபாஸ் ஷெரிப் பாகிஸ்தானின் ஆரம்ப காலங்களில் அதன் வளர்ச்சி உச்ச நிலையில் இருந்தது , தற்போது கடந்த காலங்களில் ஏற்பட்ட அரசியல் நிலைபாடு காரணமாக இந்த பொருளாதார நெருக்கடி என தெரிவித்துள்ளார்.