சாதி என்ற அழுக்கை சுமந்து வந்த சமூகத்துக்கு பகுத்தறிவை கொடுத்தது திராவிட இயக்கம் : முதலமைச்சர் ஸ்டாலின்

mkstalin சமத்துவப்புரம்
By Irumporai Apr 05, 2022 06:11 AM GMT
Report

விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது .இந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் . மேலும் அவர் பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் திமுக ஆட்சியில் நிம்மதியாக உள்ளதாக மக்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என்பதற்கு சமத்துவபுரம் கிடப்பில் போடப்பட்டதே சாட்சி. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எந்த குறையும் இல்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

தந்தை பெரியார் இல்லையென்றால் நாமெல்லோரும் இல்லை, தமிழகத்தின் முன்னேற்றமும் இல்லை. சாதி என்ற அழுக்கை சுமந்து வந்த சமூகத்துக்கு பகுத்தறிவு ஓடியது திராவிட இயக்கம் என கூறினார்.

பெரியார், அண்ணா, கருணாநிதியால் தமிழருக்கு எதிரான சூழ்ச்சிகள் எடுபடாமல் போனது. பெரியார் கண்ட கனவுப்படி தமிழகம் எங்கும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து சமூகத்தினரும் வசிக்க கூடிய முதல் சமத்துவபுரம் தமிழகத்தில் 1997ல் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு உதாரணமே சமத்துவபுரங்கள் ஆகும்.

வலுவான கிராமங்களை உருவாக்கினால் மட்டுமே வலுவான இந்தியாவை கட்டமைக்க முடியும் என்றும் தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.