பெரியார் vs மோடி - எதிர்மறையான இருவருக்கு ஒரே நாளில் பிறந்த நாள்
இன்று செப்டம்பர் 17 பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெரியார் அவர்களின் பிறந்த தினம். இருவருகே எதிர்மறையான எண்ணங்கள் உடையவர்கள். ஒருவர் ஒன்று சரி என்றால் இன்னொருவரின் அகராதியில் அது தவறு என்று இருக்கும்.
இப்படி உள்ள இருவரின் பிறந்த நாளும் ஒரே தினமாக அமைந்துள்ளது. இன்னும் இவர்கள் இருவரின் வழியிலும் அவரவர் தனித்தனி கொள்கைகள் அமைத்து பின்பற்றி வருகின்றனர்.
மோடி வழியில், பெரியார் வழியில் என்று...
இதில் யார் உயர்ந்தவர்கள் - தாழ்ந்தவர்கள் என்றும் பல பேச்சுக்களும், சர்ச்சைகளும் கூட அவ்வப்போது கிளம்பும். இந்த நிலையில் இன்று இருவரின் பிறந்த நாளையொட்டி, பலரும் மோடி vs பெரியார் என்று இணையத்தில் பதிவிட்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சி ஒன்றில் ஒரு குழந்தை பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.