கறுப்பு உடைக்கு விதித்த தடையை வாபஸ் பெற்றது பெரியார் பல்கலைக்கழகம்

By Irumporai Jun 28, 2023 06:26 AM GMT
Report

பெரியார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் கறுப்பு உடைக்கு விதித்த தடையை வாபஸ் பெற்றது.

 பட்டமளிப்பு விழா கருப்பு உடை

ஜூன் 28-ம் தேதி ஆளுநர் தலைமையில் நடைபெற இருக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு. மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.

காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில், இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது பெரியார் பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது.   

கறுப்பு உடைக்கு விதித்த தடையை வாபஸ் பெற்றது பெரியார் பல்கலைக்கழகம் | Periyar University Withdrawsgraduation Ceremony

கல்வி நிர்வாகம் சுற்றறிக்கை

இது தொடர்பாக மீண்டும் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் தலைமையில் 28.06.2023 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது.

அதேசமயம், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைபேசிகள் எடுத்து வருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல் துறையினர் அறிவுறுத்தலின்படி இவ்வலுவலக சுற்றறிக்கை வழியாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மாணாக்கர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களது நலனை கருத்தில் கொண்டு மேற்காண் சுற்றறிக்கை நிர்வாகத்தால் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது என்பதை தெரிவித்துக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.