நிதி நிறுவன மோசடி - பெரியார் பல்கலை..துணைவேந்தர் மீது 8 பிரிவுகளில் வழக்கு..!!நிபந்தனை ஜாமீன் வழங்கல்
மோசடியில் ஈடுபட்டதாக கைதான பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மீது 8 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
துணைவேந்தர் கைது
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன். பூட்டார் என்னும் தனியார் பவுண்டேஷன் நிறுவனத்தை துவங்கியுள்ள இவர், அந்நிறுவனத்தில் பல்வேறு நபர்களை பங்குதாரர்களாகவும் இணைத்துள்ளார்.
அந்நிறுவனத்தின் மூலம் அரசின் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக இவர் மீது பல்கலைகழகத்தின் தொழிலாளார் நலச்சங்க ஆலோசகர் இளங்கோவன் கருப்பூர் காவல்நிலையத்தில் ஜெகநாதன் மீது புகார் அளித்தார்.
8 பிரிவுகளில் வழக்கு
இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட வந்த போலிசார் ஜெகநாதனை கைது செய்தனர். இவர் அரசு பணியில் இருந்துக்கொண்டே வருமானம் ஈட்டும் வகையில் நிறுவனம் நடத்துவதே இவர் கைதிற்க்கு மற்றொரு காரணம்.
இந்நிலையில், நிறுவனத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தியது ஒப்பந்த முறைகேடு போன்ற 8 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
நிபந்தனை ஜாமீன்
இந்நிலையில், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் 7 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக்கூறி மாஜிஸ்திரேட் தினேஷ்குமார் ஜாமினில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.