ஈ.வே.ரா பெரியார் சாலை பெயர் மாற்றம் - தார் கொண்டு அழித்த தொண்டர்கள்

admk dmk bjp stalin periyar
By mohanelango Apr 13, 2021 11:00 AM GMT
Report

சென்னையில் உள்ள ஈ.வே.ரா பெரியார் சாலையின் பெயர் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்கு ரோடு என சமீபத்தில் மாற்றப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. 

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அரசு ஆவணங்களில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்கு ரோடு என்று தான் இருப்பதாக விளக்கம் அளித்திருந்தனர்.

இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயர் மாற்றத்தை கண்டித்ததோடு உடனே திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

அரசு உடனே திரும்பப் பெறவில்லை என்றால் மே 2-ம் தேதிக்குப் பிறகு ஆட்சி மாறிய உடன் அரசாணை வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மாற்றப்பட்ட புதிய பெயர் தார் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. பெரியாரின் தொண்டர்கள் இதனை செய்துள்ளதாகவும் அரசு பெயர் மாற்றத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் தொடர்ந்து பெயர் அழிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.