அம்பேத்கர் ஜாதிக்கான தலைவர் என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள் : அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss PMK
By Irumporai Apr 10, 2023 09:57 AM GMT
Report

தந்தை பெரியார் இல்லை என்றால் நானும் அப்பாவும் டாக்டராகி இருக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  பெரியார்தான்

சென்னையில் அனைத்திந்திய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே பணியாளர்கள் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது தந்தை பெரியார் இல்லை என்றால் நானும் எனது அப்பாவும் டாக்டர் ஆகி இருக்கமுடியாது எனது அப்பா ஏரோட்டி கொண்டிருப்பார். நான் அவருக்கு உதவியாக இருந்திருப்பேன் என்று கூறினார்.

அம்பேத்கர் ஜாதிக்கான தலைவர் என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள் : அன்புமணி ராமதாஸ் | Periyar My Father Become Doctors

அம்பேத்கர் முக்கியமானவர்

  தொடர்ந்து பேசிய அன்புமணி சமூக நீதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர். முதலில் அதன் அர்த்தம் புரிய வேண்டும், அதன்படி செயல்பட வேண்டும். அம்பேத்கரை ஒரு வட்டத்திற்குள் வைத்து விட்டனர், காந்திபோல அம்பேத்கரும் இந்தியாவிற்கு முக்கியமானவர், எல்லோருக்குமான தலைவர். மிகப்பெரிய வருத்தம் அம்பேத்கர் ஒரு ஜாதிக்கான தலைவர் என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளதாக கூறினார்.