பெரியார் சிலைக்கு தீவைப்பு
பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசபட்ட சம்பவம் பரபரப்பான நிலையில் மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பெண் விடுதலை, சமூகநீதிக்காக பாடுபட்டதந்தை பெரியார். சாகும்வரை மக்கள் தொண்டில் ஈடுபட்டவர் . அவர் மறைந்தாலும் அவரின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
ஆனால் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அவமதிக்கப்பட்டு வருகிறது பெரியார் சிலை . பெரியார் சிலைக்கு காவி சாயம், செருப்பு மாலை என பல அவமதிப்புகள் நடந்தேறி கொண்டே இருக்கிறது.
இவற்றை எல்லாம் கடந்து பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழை மேடு பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் நள்ளிரவில் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் பெரியார் வெண்கல சிலை உள்ளது. நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் பெரியார் சிலைக்கு தீ வைத்துள்ளனர். இதனால் சிலைக்கு தீவைத்த நபர்களை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பெரியாரின் சிலைக்கு தீ வைத்த மர்ம கும்பல் யார்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.