நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்! மீண்டும் பெரியார் ஈவேரா சாலை என மாற்றம்

chennai evvera raoad periyar salai
By Fathima Apr 16, 2021 03:20 AM GMT
Report

கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என மாற்றப்பட்டிருந்த சாலையின் பெயர் நள்ளிரவில் தற்போது மீண்டும் பெரியார் ஈவேரா சாலை என மாற்றப்பட்டுள்ளது.

சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையை (Grand Western Trunk Road) கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என தமிழக நெடுஞ்சாலை துறை மாற்றியது.

இதே பெயர் இணையத்திலும் வெளியானதால், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், யாரை திருப்திபடுத்த அரசு இந்த முடிவை எடுத்தது எனவும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது மீண்டும் இரவோடு இரவாக பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதால் சிறிது நேரம் பரபரப்பானது.

நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்! மீண்டும் பெரியார் ஈவேரா சாலை என மாற்றம் | Periyar Ev Ve Ra Road Name Changed In Chennai