பெரியப்பா அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி, : கேஜிஎப்- 2 படத்தை பாராட்டிய ஷங்கர்

Shankar KGF Chapter 2
1 மாதம் முன்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் கேஜிஎப். இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதால். இரண்டாம் பாகத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் கேஜிஎப் 2 என்ற பெயரில் இயக்கினார்.

இந்தத் திரைப்படம் கடந்த மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததால் வசூல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

உலக அளவில் 1000கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் படத்தை பார்த்து பல இயக்குனர்கள் படத்தை புகழ்ந்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர் கேஜிஎப் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் “இறுதியாக கே ஜி எஃப் 2 பார்த்துவிட்டேன் கதை, திரைக்கதை , எடிட்டிங் , எல்லாம் அருமையாக இருக்கிறது. யாஷ் நடிப்பு சூப்பராக இருந்தது.

பெரியப்பா அனுபவத்தை கொடுத்த இயக்குனர் பிரசாத் நீலுக்கு நன்றி படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.