பல பெண்களுடன் தொடர்பு - கணவரை கழுத்தை நெரித்துக் கொன்ற காதல் மனைவி!
பெரியகுளம் அருகே குடும்ப தகராறில் கணவரை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் சிங், திண்டுக்கல்லை சேர்ந்த சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த 19-ம் தேதி இரவு ரஞ்சித்குமார் சிங் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ரஞ்சித்குமார் சிங் பல பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்தாகவும், இதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் கூறினார்.
மேலும், இதனால் ஆத்திரத்தில் கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சத்யாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.