1967 முதல் 2021 வரையிலான தமிழக தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதங்கள்
தமிழத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி அமைதியான முறையில் நடைபெற்று நிறைவுப்பெற்றன. தமிழகத்தில் நடந்து முடிந்த 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னையில் 59.06 சதவீதமும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் 1967 முதல் 2021 வரை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம், 1967-ல் 76.56% 1971-ல் 72.10% 1977-ல் 61.58% 1980-ல் 65.42% 1984-ல் 73.47% 1989-ல் 69.69% 1991-ல் 63.84% 1996-ல் 66.95% 2001-ல் 59.07% 2006-ல் 70.56% 2011-ல் 78.01% 2016-ல் 74.24% 2021-ல் 72.78%
இவ்வாறு ஒவ்வொரு தேர்தலிலும் பதிவான வாகு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.