மாலை 5 மணி வரை தமிழகத்தில் 63.60 சதவீதம் வாக்குகள் பதிவு

election parliament tamilnadu vote
By Jon Apr 07, 2021 09:52 AM GMT
Report

தமிழகத்தில் மாலை 5 மணிவரை நிலவரப்படி 63.60 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் தலைமை அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை முதல் ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவுகள் தொடங்கின. தமிழகமெங்கும் உள்ள மக்கள் விருப்பத்துடன் வந்து விறுவிறுப்பாக வாக்கு செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவு பெரும் நிலையில் உள்ள சூழலில் தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டு சதவீதம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு வெளியிட்டுள்ளார். அதன்படி அதிகபட்ச வாக்கு சதவீதம் பதிவாகியுள்ள முதல் மூன்று மாவட்டங்கள், 70.79 நாமக்கல் 69.60 கள்ளக்குறிச்சி 69.21 கரூர் குறைவான பதிவுடைய மூன்று மாவட்டங்கள் நெல்லை 50.05 செங்கல்பட்டு 53.39 சென்னை 55.31. மாலை 6 மணிக்கு பிறகும் 7 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கலாம்.

அனைவரும் வாக்களித்த பிறகு டோக்கன் முறையில் கொரோனா பாதிப்புடையோருக்கு வாக்களிக்க அனுமதி. கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டு பொது வாக்குகள் அனைத்தும் பதிவான பிறகு உரிய விதிமுறைகளை பின்பற்றி வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். தேனியில் ரவீந்திரநாத் வாகனம் தாக்கப்பட்டது தொடர்பாக புகார் வந்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் போல தற்போதைய தேர்தலிலும் மொத்த வாக்குகளில் 74 சதவீதமாவது பதிவாகும் என எதிர்பார்க்கிறோம். 75 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆங்காங்கு சிறு சிறு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மட்டுமே காலை முதல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளன. மேலும் சின்னம் மாறி வாக்கு பதிவாவதாக வரும் புகார்களில் உண்மையில்லை. " என்று கூறினார்.