பேரறிவாளன் விடுதலை – மற்ற 6 பேர் விடுதலை குறித்து முதலமைச்சர் ஆலோசனை

M K Stalin
By Irumporai May 21, 2022 01:16 PM GMT
Report

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை சுமார் 6 ஆண்டுகாலம் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பேரறிவாளன் விடுதலை – மற்ற 6 பேர் விடுதலை குறித்து முதலமைச்சர் ஆலோசனை | Perarivalan Released Regarding Release Of 6 Others

இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, அரசு தலைமை வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அமைச்சர் துரைமுருகன், ரகுபதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.