பேரறிவாளன் விடுதலை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - தாய் அற்புதம்மாள்

A. G. Perarivalan
By Thahir May 18, 2022 06:19 AM GMT
Report

31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

இந்த நிலையில் தன்னை நன்னடைத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவிட்டது.

பேரறிவாளன் விடுதலை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - தாய் அற்புதம்மாள் | Perarivalan Released Family Press Meet

இதையடுத்து பேரறிவாளன்,தாய் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய தாய் அற்புதம்மாள்,

செய்தியாளர்களை புறக்கணித்தற்கு மன்னிப்பு கோரினார்.மேலும் அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் கண்ணீர் மல்க பேசிய அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அவர் பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி கூறினார்.

பேரறிவாளன் விடுதலை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - தாய் அற்புதம்மாள் | Perarivalan Released Family Press Meet

இதையடுத்து பேசிய பேரறிவாளன் திருக்குறளோடு தனது செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார்.என் மீது அனைத்து தமிழர்களும் அன்பு செலுத்தினார்.

என் அம்மாவுடைய நீண்ட கால போராட்டம்,ஆரம்பத்தில் நிறைய அவமானங்களை சந்தித்தார்,எங்கள் பக்கம் இருந்த நீதியும் உண்மையும் தான் என் தாயை இவ்வளவு துாரம் போராட வைத்துள்ளது.

என் குடும்பத்தினர் பலம் தான் அவர்களின் அன்பும் பாசமும் தான் என்னை இங்கு கொண்டு வந்து நிற்க வைத்துள்ளது.

எங்களுக்காக அனைவரும் துன்பப்பட்டு உழைத்து இருக்காங்க,போராடி இருக்காங்க,அரசின் ஆதரவு,மக்களின் பெரும் ஆதரவு

மற்றும் 2011 சகோதரி செங்கொடியின் தியாகம்,உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டி பேசினார்.

எனது அம்மாவின் வாழ்க்கையை திருடி விட்டதாகவும் பேரறிவாளன் வேதனை தெரிவித்துள்ளார்.

நான் நன்றி சொல்வதற்கு நிறைய பட்டியல் உள்ளது.மேலும் ஊடகம் இல்லை என்றால் என் நியாம் வெளி வந்திருக்காது.

சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்புகிறேன் என கூறினார் 31 ஆண்டுகளாக சட்டப்போராட்டத்தால் போராடி வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் குறித்த கேள்விக்கு தான் இன்னும் தீர்ப்பின் சாரம்சத்தை பார்க்கவில்லை என்று கூறினார்.