விடுதலையானார் பேரறிவாளன் - 31 ஆண்டு சிறைவாசம் முடிவுக்கு வந்தது

A. G. Perarivalan
2 மாதங்கள் முன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இருந்ததாக பேரறிவாளன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தான் நீண்ட நாள்களாக சிறையில் இருக்கிறேன்.சிறையில் எனது நடத்தை மற்றும் நன்னடத்தை எல்லாம் சரியாக இருக்கிறது.

பெல்ட் வெடிகுண்டுவில் பயன்படுத்தப்பட்ட பேட்டரி வாங்கி கொடுத்தது தான் என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை அதனால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்.

மத்திய அரசு இந்த வழக்கில் தாமதப்படுத்தியதை அடுத்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து ஜாமீன் வழங்கி இருந்தது.

ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தை ஜனாதிபதிக்கு அனுப்புவது தவறு என நீதிபதிகள் கூறியிருந்தனர். பேரறிவாளன் வழக்கு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

மேலும் இந்த வழக்கில் இருந்து பேரறிவாளனை நாங்களே ஏன் விடுதலை செய்யக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதன்பின்பு இந்த வழக்கு பேரறிவாளனின் விடுதலையை ஒட்டிய வழக்காக மாறியது. இந்த வழக்கில் ஆளுநரின் காலதாமதம் மற்றும் அவர் இந்த விவகாரத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது இவை இரண்டுமே அரசியல் சாசன ரீதியிலான பிழையாக பார்கிறோம் என்று கூறிய நீதிபதிகள்.

ஏன் இந்த வழக்கில் நாங்களே தலையிட்டு விடுதலை செய்யக்கூடாது என கேட்டு இருந்தனர். இதையடுத்து தான் இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை அளித்து தீர்பளித்துள்ளது.

ஆளுநர் 161 வது பிரிவில் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால் 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்வதாக உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்பளித்து உத்தரவிட்டது.

இதனால் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனின் சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளதால் அவரது தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.